இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஆய்வு


இந்து சமய அறநிலைய துறை ஆணையர் ஆய்வு
x

சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

கந்த சஷ்டி திருவிழா

ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சாமிநாத சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். மேலும் கோவிலில் மின்தூக்கி அமைக்கும் பணிக்காக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.

கோசாலை பணி

மேலும் கோவிலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கோசாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் புதிதாக கட்டப்பட உள்ள அலுவலக கட்டிடங்கள் மற்றும் அன்னதான கூடம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் கோவில் பணியாளர்கள் இருந்தனர்.


Next Story