நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஒரு சில இடங்களில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக தொடங்கப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மயிலாடுதுறை சரக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் ஆய்வு செய்தார்.
குளறுபடிகள்
மயிலாடுதுறை அருகே மல்லியம், வானதிராஜபுரம், நல்லத்துக்குடி, கோடங்குடி மற்றும் பிற இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் குளறுபடிகள் நடக்காமல் இருப்பதற்கு விவசாயிகளின் நலன்கள் காக்கப்படுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் தெரிவித்தார். அப்போது மயிலாடுதுறை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.