செங்கல் சூளைகளில் தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


செங்கல் சூளைகளில் தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x

திருவையாறு கொள்ளிட கரையை ஒட்டியுள்ள செங்கல் சூளைகளில் தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

திருவையாறு கொள்ளிட கரையை ஒட்டியுள்ள செங்கல் சூளைகளில் தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

விழிப்புணர்வு

தஞ்சை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் உத்தரவுப்படி திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர், தஞ்சை தொழிலக மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஆகியோர் அறிவுரைப்படி வருகிற 12-ந் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவத்தினர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்தல் சட்டம்) 1986-ன் கீழ் மாவட்ட தடுப்பு படையினர் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளவும், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வு

அதைத்தொடர்ந்து தஞ்சை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தலைமையில் திருவையாறு கொள்ளிடம் கரையை ஒட்டி சாத்தனூர், ஆச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் 4-க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்பது குறித்து சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட குழந்தைகள் உதவி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறத்தொடர்பு பணியாளர் மற்றும் திருவையாறு எஸ்.எஸ்.ஏ. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வின்போது செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனவும், அவ்வாறு பணியில் அமர்த்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story