வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு நோில் சென்று பட்டா வழங்கிய அதிகாரிகள்


வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு நோில் சென்று பட்டா வழங்கிய அதிகாரிகள்
x

வேதாரண்யத்தில் நடந்த ஜமாபந்தியில் வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு அதிகாரிகள் நோில் சென்று 400 பேருக்கு பட்டா வழங்கினர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்;

வேதாரண்யத்தில் நடந்த ஜமாபந்தியில் வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு அதிகாரிகள் நோில் சென்று 400 பேருக்கு பட்டா வழங்கினர்.

ஜமாபந்தி

வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் நடைபெற்றது.இதில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தாசில்தார் ரவிச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் வேதையன், வருவாய்துறையினர் குழுவாக சென்று 400 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினர்.

பாராட்டு

இதைத்தவிர 15 பட்டா மாறுதல் ஆணைகளும், 10 பேருக்கு ரேஷன் கார்டு நகல்களும் வழங்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும்மொத்தம் 425 பயனாளிகளுக்கு உடனடித்தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடைபெறும்போது மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக அலுவலகத்துக்கு வந்து மனுக்களை கொடுத்து அதற்கான தீர்வை பெற்று செல்வர்கள். ஆனால் வேதாரண்யத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் மனுக்களை பெற்றவுடன் நேரடியாக பொது மக்களை தேடிச்சென்று 400 பேருக்கு பட்டா வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகளை மீனவ மக்கள் பாராட்டினர்.


Next Story