4 வழிச்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு


4 வழிச்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

4 வழிச்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

மத்திய சாலை போக்குவரத்து துறை மூலம் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி இடையே உள்ள இருவழிச்சாலை, 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் ஊத்தங்கரை முதல் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி வரை நடந்து வரும் 4 வழிச்சாலை பணிகள், பஸ் நிறுத்தங்கள், மேம்பாட்டு பணிகள், கனரக வாகனங்கள் ஓய்விட பணிகள், நகர பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் ஏரிகளின் ஓரம் தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகியவை குறித்து தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்ட பொறியாளர் ரவி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story