நாளை பள்ளிகள் திறப்பு: ஓசூரில் 175 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு


நாளை பள்ளிகள் திறப்பு:  ஓசூரில் 175 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
x

நாளை பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு ஓசூரில் 175 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

நாளை பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு ஓசூரில் 175 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும், நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் முன்னிலை வகித்தார்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வித்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது 175 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அறிவுறுத்தல்

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் கூறுகையில், தனியார் பள்ளி வாகனங்களின் டிரைவர்கள், கிளீனர்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் போது கவனமாக இயக்க வேண்டும். குழந்தைகள், வாகனங்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் அவர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். பாதுகாப்பாக ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தீயணைப்பு அலுவலர் ராஜா தலைமையில், வாகனங்களில் எதிர்பாராத தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்விளக்கம் மற்றும் போலி ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.


Next Story