தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
அம்மாப்பேட்டை பகுதியில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
மெலட்டூர்,மே.13-
அம்மாப்பேட்டை பகுதியில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
தூர்வாரும் பணிகள்
தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந்து தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நெடுந்தெரு பகுதியில் தேவராயன்பேட்டை வாய்க்கால், காவளூர் பகுதியில் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
உறுதி அளித்தனர்
தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் வெட்டாற்றை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். அப்போது கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலைகோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியாளர்கள் செல்வபாரதி, சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.