துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு


துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x

கரம்பயம் துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்;

கரம்பயம் துணை மின் நிலையத்தில் நேற்று பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பராமரிப்பு பணிகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டனர். இந்த நேரத்தில் கரம்பயம் துணை மின் நிலையத்தில் எந்திரங்களும் மின்மாற்றிகளும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள், தொழில்நுட்ப உதவியாளர் ராம்குமார், எந்திர பராமரிப்பு பணி மேற்பார்வையாளர் ராஜேந்திர விக்னேஷ் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள் கூறியதாவது:-;தஞ்சை மின் மானி சோதனை கூடத்துக்கு உட்பட்ட 70 துணை மின் நிலையங்களுக்கு மின் நிறுத்தம் செய்யும் தினத்தில் அந்தந்த துணை மின் நிலையத்தில் எந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக வருவோம். தொடர்ந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வோம். ஒரு துணை மின் நிலையத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் ஆய்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story