நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு


நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
x

கல்லணையில் சீரமைப்பு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம், மற்றும் பாலங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அதேபோல காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் மின்மயமாக்கப்பட்ட ஏற்றி இறக்கும் கருவிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் சிறுவர் பூங்கா அருகில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படும் சமயங்களில் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.காவிரி ஆற்றின் உள்பகுதியில் நீரோட்டத்தை சீரமைக்கும் வகையில் தடுப்பு அமைப்புகள் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு உதவி பொறியாளர்கள் திருமாறன், அன்பு செல்வன் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


Next Story