விதைநெல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


விதைநெல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் விதைநெல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரக உத்தரவின்படி விதை ஆய்வு துணை இயக்குனர்கள் சோமு, நாகை தேவேந்திரன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் கவுதமி, சுமதி, நடராஜ், முருகராஜ், திவாகர் ஆகியோரை கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக விதை மாதிரிகள் சேகரித்து விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். விதைச்சட்டத்தின் கீழ் குறைகள் காணப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த 36 டன் விதைகளை விற்பனை செய்வதற்கு தடை ஆணை வழங்கினர். ஆய்வின் போது மயிலாடுதுறை விதை ஆய்வாளர் இளவரசி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story