கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் அதிகாரி தகவல்


கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் தங்கள் உரிமத்தை ஆன்லைன் மூலம் வருகிற 31-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் 2024-ம் ஆண்டிற்கான உரிமத்தை வருகிற 31-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) புதுப்பிக்க வேண்டும். இதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

http://dish.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடனே புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் 15 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஆவணங்கள்

மேலும் உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றிக்கு இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவம் -2 மற்றும் தகுந்த சான்று ஆவணங்களுடன் கடலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒப்பந்ததாரர்களும் இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

நெருக்கடி

மேலும் 31.10.2023-க்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாமதக்கட்டணம் பொருந்தும். இணைய வழியாக மட்டுமே சமர்ப்பித்து உரிமம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் இயக்கக கடைசி நேர நெருக்கடி மற்றும் இணைய வழி நெருக்கடிகளை தவிர்க்க, முன்னதாகவே உரிமம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணை இயக்குனர் அலுவலகத்தை 04142-222826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கடலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணைஇயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story