நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி சோதனை
நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி சோதனை நடத்தினார்.
அரியலூர்
தா.பழூர்:
அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருவதால், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின்படியும், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வழிகாட்டுதல் படியும் மயிலாடுதுறை சரக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய் துறையின் துணை சூப்பிரண்டு ஜெகதீசன், தா. பழூர் ஒன்றியம் வாழைக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி நெல் கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், விசாரணை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story