தினத்தந்தி செய்தி எதிரொலி: சீர்பாதநல்லூரில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அதிகாரி ஆய்வு


தினத்தந்தி செய்தி எதிரொலி:    சீர்பாதநல்லூரில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக சீர்பாதநல்லூரில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பாதநல்லூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினிகுடிநீர் தொட்டி ஆகியவை சேதமடைந்து போனது. இதனால் பல மாதங்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர். மேலும் போதிய வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது.

இதைபாா்த்த ரிஷிவந்தியம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சீர்பாதநல்லுருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளையும், பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், குடிநீா் தொட்டிகள், சுகாதார வளாகத்தை சீரமைப்பதோடு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்தனர். தினத்தந்தி செய்தி எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்ததை அறிந்த கிராம மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story