Normal
வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு
ஆழியூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நாகை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலமுருகன் ஆய்வு செய்தார். ஆழியூர் ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டுமானப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆழியூர் - திருக்கண்ணங்குடி செல்லும் சாலையில், ஆற்றங்கரை தெரு பகுதியில் பாலையூர் வாய்க்கால் பாலம் கட்டும் பணிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கையற்கன்னி, எழிலரசி, ஊராட்சி தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் மும்தாஜ் பேகம் ஜமால், ஊராட்சி செயலாளர் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story