வளர்ச்சிப் பணிகளை அதிகாரி ஆய்வு


வளர்ச்சிப் பணிகளை அதிகாரி ஆய்வு
x

தலைஞாயிறு பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குனர் கனகராஜ் ஆய்வு செய்தார். தலைஞாயிறு ராஜன் வாய்க்காலில் ரூ.9 லட்சம் செலவில் கட்டப்படும் பாலப்பணியையும், ரூ.4 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும், பேரூராட்சி அலுவலக மாடியில் அமைக்கப்பட்டுள்ள மாடி தோட்டத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் முட்டை ஓடு, டீக்கடையில் சேகரிக்கப்படும் டீத்தூள் கழிவு உள்ளிட்டவைகளை காயவைத்து காய்கறி பண்ணை தோட்டங்களுக்கு உரமாக்குவதற்கு சேகரித்து அனுப்பி வைக்கப்படும் முறையை உதவி இயக்குனருக்கு விளக்கி கூறினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், துணை தலைவர் கதிரவன், பேருராட்சி எழுத்தர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story