பட்டாசு விற்பனை கடைகளில் அதிகாரி ஆய்வு


பட்டாசு விற்பனை கடைகளில் அதிகாரி ஆய்வு
x

பட்டாசு விற்பனை கடைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் வைக்க விருப்பமுள்ளவர்கள், அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்திருந்தவர்களின் கடைகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தீயணைப்பு துறையினர் வழங்கிய சான்று, தீயணைப்பு கருவிகள் உள்ளதா?, கடையின் பின்புறமும் வழி இருக்கிறதா?, அருகில் தீப்பிடிக்கக்கூடிய வகையான பொருட்கள் அல்லது கடைகள் உள்ளதா? வாடகை இடத்தில் கடை வைத்திருப்போர் உரிமையாளரிடம் பெற்ற ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கடைகளில் குறைகள் இருந்தால், அதனை சரி செய்த பின் மீண்டும் ஆய்வு செய்து, அனுமதி அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வின்போது அரியலூர் தெற்கு தாசில்தார் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story