பெரம்பலூர்-துறையூர் சாலை மேம்பாட்டு பணியை அதிகாரி ஆய்வு


பெரம்பலூர்-துறையூர் சாலை மேம்பாட்டு பணியை அதிகாரி ஆய்வு
x

பெரம்பலூர்-துறையூர் சாலை மேம்பாட்டு பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் முதல் துறையூர் வரை செல்லும் சாலை திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் சுமார் 30 கி.மீ. வரை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சென்னை, கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் எம்.கே.செல்வம், பெரம்பலூர்-துறையூர் சாலை பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தார் சாலையின் தரம், அடர்த்தி, அளவீடுகள் மற்றும் அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, சாலையோரம் மரக்கன்றுகள் நட்டார். இந்த ஆய்வின்போது கடலூர் கோட்டப்பொறியாளர் சுந்தரி, பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story