திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
கல்லிடைக்குறிச்சியில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்தில் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தாமிரபரணி பழைய ஆற்றுப்பாலத்தில் நினைவுச் சின்னம், பூங்கா மேம்பாடு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹீன் அபுபக்கர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னடியன் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை சுத்திகரிப்பு செய்ய ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் 18 இடங்களில் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்துகளின் என்ஜினீயர் தர்மராஜன் முன்னிலை வகித்தார். நகர பஞ்சாயத்து துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உதவி என்ஜினீயர் ஷெரிப், பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாட்சி, பெரிய செல்வி, ஜானகி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.