பள்ளி கட்டிடங்களை அதிகாரி ஆய்வு


பள்ளி கட்டிடங்களை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜகிரி ஊராட்சியில் பள்ளி கட்டிடங்களை அதிகாரி ஆய்வு

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிழக்கு, மேற்கு என 2 தொடக்கப் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிட பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் சத்துணவு பிரிவு நேர்முக உதவியாளர் அன்பரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story