விதைப்பண்ணைகளில் அதிகாரி ஆய்வு
விதைப்பண்ணைகளில் சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார்.
விதைப்பண்ணைகளில் சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார்.
பண்ைணயில் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 729 எக்டரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களின் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சாத்தூர் வட்டாரம் போத்தி ரெட்டியபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து. வம்பன்-11 விதைப்பண்ணையை சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார். பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, கலவன் பயிர்கள் நீக்கம் மற்றும் விதைச் சான்று நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
தரமான விதை
ஆய்வுக்கு பின்னர் அவர் கூறுகையில் விதை உயிருள்ள இடுபொருள். நல்ல விளைச்சலுக்கும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் அடிப்படை தரமான நல் விதை ஆகும். தரமான விதை இல்லையென்றால் ஏனைய இடுபொருட்களை சரியான அளவில் இட்டாலும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதைச்சான்று விதிகளின்படி உதவி பண்ணைகளை ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணைஇயக்குனர் ஜெய செல்வி இன்பராஜ், மதுரை விதைச்சான்று துணை இயக்குனர் முருகேசன், விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.