சிறுபாக்கம் பகுதியில் சொட்டுநீர் பாசன கருவிகளை அதிகாரி ஆய்வு


சிறுபாக்கம் பகுதியில் சொட்டுநீர் பாசன கருவிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் பகுதியில் சொட்டுநீர் பாசன கருவிகளை அதிகாரி ஆய்வு செய்தனா்.

கடலூர்

சிறுபாக்கம்,-

சிறுபாக்கம் பகுதியில் மங்களூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் குறு, சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் வயலில் பயன்படுத்தப்பட்ட சொட்டு நீர் பாசன கருவிகளை மங்களூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சிறுபாக்கம், மங்களூர், வடபாதி, நரையூர், சித்தேரி, எஸ்.புதூர் கிராமங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்த பயிர்களின் பரப்பளவு, நீர்ப்பாசன வழிமுறைகள், சாகுபடி பயிர்களில் நோய் தாக்கும் போது மருந்து கரைசல்களை தெளிக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆய்வின் போது இளநிலை பொறியாளர் ராஜகோபால் உடனிருந்தார்.


Next Story