மருதாடு கிராமத்தில்நெல் விதைப்பண்ணையை அதிகாரி ஆய்வு
மருதாடு கிராமத்தில் நெல் விதைப்பண்ணையை அதிகாரி ஆய்வு செய்தார்.
-
கடலூர் அருகே மருதாடு கிராமத்தில் உள்ள நெல் விதைப்பண்ணையை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நெற்பயிர் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து வெள்ளப்பாக்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட கருப்புகவுனி, தூயமல்லி, சீரகசம்பா ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டதுடன், அதே கிராமத்தில் தென்னை வயலில் நுண்ணீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். இதையடுத்து கீழ்குமாரமங்கலத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிதாக கட்டப்படும் கட்டிடப் பணிகளையும், கீழ்குமாரமங்கலம் துணை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் வேளாண் மை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகிராமன், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் பொன்னிவளவன், உதவி விதை அலுவலர்கள் தெய்வசிகாமணி, விஜயசண்முகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவமணி, புஷ்பேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.