ஓவேலியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானையை பிடிப்பது குறித்து அதிகாரிகள், வனத்துறையினர் ஆலோசனை


ஓவேலியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானையை பிடிப்பது குறித்து அதிகாரிகள், வனத்துறையினர் ஆலோசனை
x

ஓவேலியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானையை பிடிப்பது குறித்து அதிகாரிகள், வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்

ஓவேலியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானையை பிடிப்பது குறித்து அதிகாரிகள், வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

காட்டு யானையை பிடிக்க

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையில் கடந்த மாதம் ஆனந்தகுமார் என்ற டீக்கடைக்காரரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதேபோல் மற்றொரு காட்டு யானை வாழும் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணை கொன்றது. இதனால் காட்டு யானைகளால் அச்சுறுத்தல் நிலவுவதாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டீக்கடைக்காரரை கொன்ற காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை ஏற்று வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் காட்டு யானையை பிடிப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள், வனத்துறையினர் ஆலோசனை

தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டத்தை உணர்த்தும் வகையில் முன்கூட்டியே எச்சரிக்கும் அலாரம் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதை கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், உதவி வன பாதுகாவலர் ஸ்ரீனிவாசன், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து காட்டு யானையை பிடிப்பது குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினர்.

மேடு பள்ளங்கள் இல்லாத இடத்துக்கு காட்டு யானையை விரட்டி வந்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள், வனத்துறையினர் கிளன் வன்ஸ், 40 ஏக்கர், ஆரோட்டுப்பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து காட்டு யானை சில தினங்களில் பிடிக்கும் பணி தொடங்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆய்வின்போது வனவர்கள் சுபேத்குமார், பரமேஸ்வரன் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story