கடைகளில் அதிகாரிகள் சோதனை


கடைகளில் அதிகாரிகள் சோதனை
x

வந்தவாசியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்ததில், 42 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆணையர் (பொறுப்பு) பி.கே.சரவணன், சுகாதார ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம் மற்றும் களப் பணியாளர்கள் வந்தவாசி பழைய பஸ் நிலையம், பஜார் வீதி, காந்தி சாலை, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 28 கடைகளில் இருந்து 42 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story