நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு


நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு
x

திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாருவது குறித்து ஆய்வு செய்தனர். நாளை (புதன்கிழமை) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாருவது குறித்து ஆய்வு செய்தனர். நாளை (புதன்கிழமை) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

கால்வாய்களை தூர்வார உத்தரவு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மழைக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள நொச்சிமலை ஏரி, கீழ்நாச்சிப்பட்டு ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை 10 நாட்களுக்குள் தூர்வார வேண்டும் இல்லையென்றால், இந்த ஆண்டும் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும்.

அவ்வாறு சென்றால் மக்கள் திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

எனவே நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

அதனைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமையில் தாசில்தார் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ரகுராமன் மற்றும் அலுவலர்கள் கீழ்நாச்சிப்பட்டு ஏரி பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து பலர் குடியிருப்புகள் கட்டி உள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் நீர்வரத்து கால்வாய்கள் செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உதவி கலெக்டர் வெற்றிவேல் கூறுகையில், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நொச்சிமலை ஏரி மற்றும் கீழ்நாச்சிப்பட்டு ஏரி பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது.

நாளை (புதன்கிழமை) ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு மழையின் போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு தேவையான அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.


Related Tags :
Next Story