புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் கள ஆய்வு


புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் கள ஆய்வு
x

புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் கள ஆய்வு நடந்தது.

கரூர்

புகழூர் செம்படாபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கரும்புகை மற்றும் கரித்துகள்கள் வெளிவருவதாக ெபாதுமக்கள் ெதாடா்ந்து புகார் ெதரிவித்து வந்தனா். இந்தநிலையில் புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் புகழூர் சர்க்கரை ஆலைவளாகத்திற்குள் நேரில் சென்றனா்.

பின்னா் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகை குழாய் உள்ள பகுதிகளையும், கரித்துகள்கள் ஆலை வளாகத்திற்குள் படிந்துள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றும் கள ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story