சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் அளவீடு செய்தனர்


சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் அளவீடு செய்தனர்
x

கே.வி.குப்பம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

வேலூர்

கே.வி.குப்பம் சந்தை மேட்டில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., தாசில்தார் அ.கீதா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர் வேலு, கீழ் முட்டுக்கூரில், சுடுகாட்டுக்குச் சொந்தமான இடம் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் நேற்று ஆக்கிரமிப்பில் உள்ளதாக் கூறப்பட்ட சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பகுதியை பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் அளவீடு செய்தனர்.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் வேலு, சர்வேயர்கள் ரம்யா, பவ்யா, வருவாய் ஆய்வாளர் சரவணன், பொதுப்பணித் துறை அதிகாரி ரமேஷ், கிராம உதவியாளர்கள் கண்ணதாசன், சண்முகம், சரிதா, தன்ராஜ், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story