வேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு


வேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகளை சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலக தென்காசி மாவட்ட மண்டல அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குனருமான அருள்நங்கை மற்றும் தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் (திட்டங்கள்) நல்லமுத்து ராஜா ஆகியோர் ஆலங்குளம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து விரிவான திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்தனர். பின்னர் 2021-22-ம் நிதியாண்டில் குத்தபாஞ்சான் கிராமத்தில் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் விசை தெளிப்பான் வழங்கியவற்றை நேரில் கள ஆய்வு செய்தனர்.

2022-23-ம் நிதியாண்டில் மேற்படி திட்டத்தில் நாரணாபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் உலர்களம் அமையவிருக்கும் இடத்தையும், ஊத்துமலை கிராமத்தில் தரிசு நிலம் தொகுப்பு திடல் அமையவிருக்கும் இடத்தையும் மற்றும் உளுந்து விதைப்பண்ணை அமைவிடத்தையும் நேரில் களஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், மணிகண்டன், சுமன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story