மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உரக்கிடங்கு, உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கிடங்கு, உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பாலா உத்தரவின்படி மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) எஸ்.கீதா தலைமையில் வேளாண் அலுவலர்கள் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் முள்ளிப்பட்டு, நடுக்குப்பம், கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை உரக்கடைகளிலும், உரக்கிடங்குகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உர விற்பனைக்கான உரிமம், இருப்பு விவரம் முறையாக பதிவு செய்யப்படுகிறதா, அரசு நிர்ணயித்த விலையில் உரம் விற்கப்படுகிறதா, அதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா, விலைப்பட்டியல் பலகையில் உரங்களின் விலை குறிப்பிட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் தெரிவித்த புகார்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம், என அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story