தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
கோத்தகிரி
புத்தாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிக்கு வந்து, தனியார் விடுதிகளில் தங்கியுள்ளனர். அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார்கள் சதீஸ்வரன் நாயக், நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதிகளுக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தபடுகிறதா?, பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் விடுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.