இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு
தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வத்திராயிருப்பு,
தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மருத்துவக்குழுவினர் ஆய்வு
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக்குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் வேறு ஏதும் தொந்தரவு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டனர்.
அச்சப்பட தேவையில்லை
பாதித்தவர்களின் உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சிவகாசி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம் கூறினார்.
ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுருவு, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனா்.