நோய் தாக்கப்பட்ட மணிலா வயலில் அதிகாரிகள் ஆய்வு


நோய் தாக்கப்பட்ட மணிலா வயலில் அதிகாரிகள் ஆய்வு
x

தினத்தந்தி செய்தி எதிரொலியால் நோய் தாக்கப்பட்ட மணிலா வயலில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் கனியாமூர் கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மணிலா பயிரில் இலை சுருட்டு நோய், பழுப்பு நோயால் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்தது. இது பற்றி தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதை பார்த்த வேளாண்மை அலுவலர் ராதா, வேளாண்மை உதவி அலுவலர் செந்தில், உதவி விதை அலுவலர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், நிலத்தடியில் சுண்ணாம்பு மண் பரப்பு காணப்படுவதாலும், மழை நீர் தேங்குவதாலும் இலை பழுத்து நோய் தாக்குகிறது, மேலும் செடியில் இலை சுருட்டு புழு உருவாகி இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க, செடி முளைத்த 40 நாளில் இருந்து 50 நாட்களுக்குள் இமாமெத், ஜிங்சல், பெரசெல்பேட் ஆகிய மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றனர். மேலும் இது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story