கோத்தகிரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: அழுகிய பழங்களை விற்ற 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்


கோத்தகிரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: அழுகிய பழங்களை விற்ற 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 4 May 2023 5:00 AM IST (Updated: 4 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: அழுகிய பழங்களை விற்ற 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்

நீலகிரி

கோத்தகிரி

பழங்கள் பெரும்பாலும் செயற்கை முறையில் ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகின்றன. இதனால் அதை உண்ணும் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, அவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள பழகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது 2 கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதே போல மற்ற 2 பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த 4½ கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் தெரிவிக்கையில், தர்ப்பூசணி, மாம்பழம், வாழைபழம் போன்ற பழங்களை இரசாயன பொருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story