தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு
கழுகுமலை தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் நேற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் கோவில்பட்டி தொழிலாளர் துணை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் பிரேம்குமார், சைல்டுலைன் கள பணியாளர் குருபாரதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து தீப்பெட்டி ஆலையில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா? என விசாரணை நடத்தினர். பின்னர் அதன் உரிமையாளர்களிடம் குழந்தை தொழிலாளர்களை பணியில் சேர்க்க கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கோவில்பட்டி சாலை, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story