மழைநீர் தேங்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
தெற்கு கள்ளிகுளம் பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி பகுதியில் மேலக்கள்ளிகுளம் முதல் பள்ளிவாசல் வரை உள்ள ஓடைத்தெருவில் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் செல்லமுடியாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் உட்புகும் நிலை இருந்து வருகிறது. இதற்கு தீர்வுகாண அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிச்சையா உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அடைப்பு ஏற்படாமல் மழைநீர் விரைவாக வழிந்தோட சீரமைக்க வேண்டிய பகுதிகளை ேமற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினார். இதுதொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிச்சென்றனர்.