சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x

சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர்-சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவர் தெரு உள்ளது. இந்த தெரு சாலை மிகவும் சேதமடைந்து இருந்ததால் இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமமக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சத்தில் 400 மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story