பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு


பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
x

சிதம்பரம் பகுதி பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறைசார்பில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றது. இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் கு. அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் க. விமலா, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், கோட்டாட்சியா் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளிகளின் 266 வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் வாகனங்களில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா?, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, வாகனத்தின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அது இயங்குகிறதா?, கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா?, அவசரகால கதவு நல்ல நிலையில் உள்ளதா? சரிவர இயங்குகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.


Next Story