செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
காலை உணவின் தரம் குறித்து செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 189 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர். நேற்று காலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவான உப்புமா, சாம்பார் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ- மாணவிகளுக்கு போதுமான அளவு உணவு அளிக்கப்படுகிறதா?, உணவு சரியான அளவில் ருசி உள்ளதா? என நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலையரசி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் வேல்மணி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story