சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு


சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
x

மோர்தானா ஊராட்சியில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் போடியப்பனூர், ராகிமானப்பல்லி ஆகிய கிராமங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன, பல வருடங்கள் ஆன மரங்கள் சாய்ந்து விழுந்தன, வாழை மாமரம் உள்ளிட்ட ஏராளம் மரங்கள் சாய்ந்தது, வீடுகளின் கூரைகள் பறந்தது, மாட்டு கொட்டகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

சூறைக்காற்றால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை நேற்று குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சேதம் மதிப்பீடு கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வருவாய்த்துறை, வேளாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

இப்பகுதியில் உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் கோதண்டன், ஊராட்சி மன்றதலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story