பாலாற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பனை கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு


பாலாற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பனை கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு
x

பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பனை கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பனை கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப்பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப்பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு பாலாற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் மாட்டு வண்டிகளில் கூட மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48கோடி மதிப்பீட்டில், 1345 மீட்டர் நீளத்திற்கு தரைகீழ் தடுப்பனை அமைக்கும் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் 23-ந் பூமி பூஜை நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தற்போது இதற்கான பணிகள் பாலாற்று படுக்கை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இப்பணிகளை செயற்பொறியாளர் ரமேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளின் விவரங்கள் மற்றும் இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தன்மை ஆகியனவும் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார். இதனையடுத்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர்கள் மெய்யழகன், சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story