சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு


சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

செங்கோட்ைட அருகே சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு அலகு மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) பழனியப்பன் தலைமையில் உள்தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சிறப்பு பழுதுபார்த்தல் 2021-22 திட்டத்தின் கீழ் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி-திருமலைக்கோவில் சாலை ரூ.1 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்தில் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் தரத்தை எந்திரம் மூலம் பரிசோதனை செய்தனர். ஒவ்வொரு சாலையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவுகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா? அளவு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி ஒப்பந்ததாரர் பணி செய்துள்ளாரா? என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், கோட்ட பொறியாளர்கள் ராஜசேகர், ஜெகன்மோகன், உதவி கோட்ட பொறியாளர்கள் திருவருள்செல்வன், செல்வராஜ், உதவி பொறியாளர் அறிவெழில், இளநிலை பொறியாளர் முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story