கோத்தகிரியில் சொத்துவரி சீராய்வுக்கான அளவீட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு


கோத்தகிரியில் சொத்துவரி சீராய்வுக்கான அளவீட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x

கோத்தகிரியில் சொத்துவரி சீராய்வுக்கான அளவீட்டு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ் குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், அதிகரட்டி, பிக்கட்டி, ஓவேலி, சோலூர் என மொத்தம் 11 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சொத்து வரி குறித்த விகிதாச்சாரப்படி பேரூராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரின் உத்தரவுப்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா அறிவுரையின் பேரில் செயல் அலுவலர்கள் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள், வீடுகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பகுதியில் உள்ள கேர்பெட்டா, அளியூர் மற்றும் அறையட்டி கிராமப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களை அளவீடு செய்யும் சீராய்வு பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story