பூச்சி கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஊட்டியில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா? என்று பூச்சி கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி
ஊட்டியில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா? என்று பூச்சி கொல்லி மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் நலன் கருதி அபாயகரமான பூச்சி கொல்லி மருந்துகளான மோனோ குரோட்டோபாஸ், குளோரிதபைரிபாஸ், புரோபென்னோபாஸ், அசிபெட் குளோரிபைரிபாஸ், சைப்பர் மெத்திரின், புரொபென்னோபாஸ் மற்றும் சைப்பர் மெத்திரின் ஆகியவற்றை விற்பனை செய்ய அடுத்த மாதம்(ஏப்ரல்) 29-ந் தேதி வரை தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள பூச்சி கொல்லி மருந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று வேளாண்மை துறை உதவி இயக்குனர், தரக்கட்டுப்பாடு(பொறுப்பு) அதிகாரி லாவண்யா ஜெசுதா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கொண்ட குழுவினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் அபாயகரமாக விளங்கும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த பூச்சி கொல்லி மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து சட்டம் 1958-ன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், இந்த வகை பூச்சி கொல்லி மருந்துகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை விற்பனைக்கு இருப்பு வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அந்த வகை மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.