நம்பியூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை30 கிலோ பாலித்தீன் பை-புகையிலை பொருட்கள் பறிமுதல்


நம்பியூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை30 கிலோ பாலித்தீன் பை-புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

நம்பியூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனையில் 30 கிலோ பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு

நம்பியூர் பகுதிகளில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் நம்பியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் ஞானப்பிரகாசம், வெங்கடேஸ்வரன், நம்பியூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மேகலா ஆகியோர் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

அப்போது கடைகளில் சுமார் 30 கிலோ பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையின்போது பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் சென்றனர்.


Next Story