வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு


வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு
x

வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடந்தது.

கரூர்

புன்செய் புகழூர், நஞ்சை புகழூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா 1,705 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். அதன் அடிப்படையில் நேற்று நன்செய் புகழூர் கிராம பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் புகழிமலையை சுற்றி குடியிருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story