ராமநத்தம் பகுதியில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு


ராமநத்தம் பகுதியில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் பகுதியில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே ஆவட்டி, வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த வாரத்தில் நடந்த விபத்துகளில் 6 பேர் பலியாகினர். இனி இது போன்று விபத்துகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து மேற்கண்ட பகுதியில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், கடலூர் உதவி கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், திருச்சி சுங்கச்சாவடி நெடுஞ்சாலை சிவில் மேலாளர் சிவசங்கரன் மற்றும் ரகுநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரி கார்டு, புதிய சிக்னல் விளக்கு அமைப்பது, சாலை விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


Next Story