சுடுகாடு பாதையை 10 அடியாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு


சுடுகாடு பாதையை 10 அடியாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாடு பாதையை 10 அடியாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அடுத்த சந்திரபுரம் பாராண்டபள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடு மயானத்திற்கு செல்லும் பாதை 3 அடியாக உள்ளது. மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மிகவும் குறுகிய பாதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து அந்த இடத்தில் நாளை (திங்கட்கிழமை) சர்வே செய்து மயானத்திற்கு செல்லும் பாதை சுமார் 10 அடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்

ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் சந்திரபுரம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி மற்றும் வருவாய் துறையினர், பொது மக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story