அரிசி அரவை ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


அரிசி அரவை ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

அரிசி அரவை ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரிசி அரவை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா? என அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று திருச்சி சரக போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில், குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் லாலாபேட்டை, காவல்காரன்பட்டி, தோகைமலை பகுதிகளில் உள்ள அரிசி அரவை ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, ஆலைகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா? பயன்பாடுகள் எப்படி உள்ளது? என்றும் சோதனை செய்தனர்.


Next Story