நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
x

நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருப்பூர்

பல்லடம்,

பல்லடத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

எரிவாயு தகனமேடை

பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் அதிகாரிகளை சிறை பிடித்தனர். இதையடுத்து தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

அப்போது அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் மறுத்தனர். இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வேறு பகுதிக்கு மாற்றுங்கள்

இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேஷன் கடை, பனியன் நிறுவனம், பள்ளி ஆகியவை உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே பிரச்சினை இல்லாத நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story