எண்ணெய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


எண்ணெய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x

எண்ணெய் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசேந்திரன்(வயது 54). இவரது மனைவி ஜோதி. எண்ணெய் வியாபாரம் செய்து வரும் அரசேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அரசேந்திரன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் கணவரிடம் கோபித்துக்கொணடு ஜோதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அரசேந்திரன் வயலுக்கு அடிக்கக்கூடிய மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story